CSED பற்றி...(About CSED)

எமது சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (CSED) 1987-ம் ஆண்டு முதல் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் மாநில மற்றும் தேசிய அளவிலும் குழந்தைகள், பெண்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொருளாதார ரீதியான விளிம்பு நிலை மக்களின் நலன் மற்றும் உரிமைகளை மேம்படுத்திடல், நவீன கொத்தடிமை முறையான சுமங்கலி திட்டத்தில் பணிபுரியும் பெண்களை மீட்பதற்கான பணிகள் மற்றும் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகின்றது.

இதன் தொடர் பணியாக வளரிளம் பருவத்தினர் இளைஞர்கள் பெண்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பாலியல்பு மற்றும் இனப்பெருக்க நலவாழ்வு உரிமைகளை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த செயலி எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது? (Why this app? )

இன்றைய சூழலில் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக வளரிளம் பருவத்தினர் பாலியல்பு மற்றும் இனப்பெருக்க நலன் பற்றிய பயனுள்ள தகவல்களை எளிய முறையில் அறிந்திடும் விதமாக இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இன்று தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி விண்ணை தொடும் அளவு உயர்ந்திருந்தாலும். அது சில சமயங்களில் ஆதாரமற்ற தகவல்களையும் எதிர்மறை சிந்தனைகளையும் தந்து இளம் வயதினரின் வாழ்வை சீர் குலைக்கிறது. இவ்வாறான சூழலில் அறிவோம் பாலியல்பை என்ற இந்த செயலியானது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம்.

ஒளி காட்சியகம்

Android Application

Download At Play Store