பணிகள்:திரவ சமநிலை, உடல் மின்பகுப்பொருள் சமநிலை, மற்றும் சிறுநீர் வெளியேற்றம்
அமைப்புகள்: சிறுநீரகம், சிறுநீர்க்குழாய்கள், மற்றும் சிறுநீர்ப்பை
இனபெருக்க மண்டலம்
மண்டலம் இனபெருக்க மண்டலம்
பணிகள்: இனப்பெருக்கம்
அமைப்புகள்:
பெண்: அண்டம், ஃபல்லொபியன் குழாய்கள், கருப்பை, கருவாய், யோனி, பெண்குறிமூலம் மற்றும் மார்பு.
ஆண்: விந்தகம், விந்துக்குழல், விதை விதைப்பை, மற்றும் ஆண்குறி
பாலியல்பு
நம் பூமியில் உயிரினங்கள் நிலைத்திருக்க ஒவ்வொரு உயிரினமும் தனக்கான சந்ததியை உருவாக்குவது இயற்கையே. எனவே, பாலியல்பு பற்றி பேசுவதும், தெரிந்து கொள்வதும், பாலுறவு குறித்த தவறான எண்ணங்களையும்; கருத்துக்களையும் நீக்க உதவும்.
இளவயது திருமணம்
பிரசவத்தின்போது தாயும், சேயும் இறக்கும் சம்பவங்களில் இளவயது திருமணங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இளவயது திருமணம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மனித உரிமையை பறிக்கும் கொடுஞ்செயலாகும்.
மாதவிடாய்
எச்சில், வியர்வை, சிறுநீர் போல மாதவிடாய் உதிரமும் உடல்கழிவுகளில் ஒன்றே. மாதவிடாயை அசுத்தமானது, புனிதமற்றது என்று கருதுவது மூடநம்பிக்கையாகும். எல்லா நாட்களைப்போலவே மாதவிடாய் நாட்களும் பயனுள்ளவையே.
பாலியல் வன்முறை
கொடுஞ்சொற்களால் துன்புறுத்துவது, தரக்குறைவான கேலிப்பேச்சுக்கள், சீண்டல்கள், குடும்பத்தில், பணித்தளங்களில் சமூகத்தின் பல்வேறு தளங்களில் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள், பாலியல் அத்துமீறல்கள் நடத்தப்படுவது மட்டுமின்றி அவற்றால் பாதிக்கப்பட்டோரையே அதற்கு காரணம் என்று இழித்துக்கூறுதல், வரதட்சணை கொடுமைகள் மற்றும் சமூக புறக்கணிப்பு என பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளின் வடிவம் பலவாகும்.
உடல் மனம் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளை வேரறுப்போம்.
பாலினம்
ஆண்-பெண் ஆகிய இரண்டு பாலினத்தைப் போலவே மூன்றாம் பாலினமும் மனித இனமே என்பதை அங்கீகரிப்போம். மனிதர்களுக்குள் வேறுபாடுகள் இயற்கையானவையே. ஆனால், உயர்வு தாழ்வு என்ற பாகுபாடுகள் அநீதியானவை. எனவே பாகுபாடில்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட முயற்சிப்போம்.